தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தற்பொழுது வரையிலும் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும் தற்பொழுது இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வரும் நிலையில் இவருடைய நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள், வைரம் நகைகள், நவரத்தினக் கல், வெள்ளி பொருட்கள் ஆகியவை காணவில்லை என புகார் அளித்திருந்த நிலையில் ஆனால் தற்பொழுது 60 பவுன் இல்லை 200 சவரன் நகைகள் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த நகைகளின் மதிப்பு மொத்தம் ஆறு கோடி எனவும் கூறப்படுகிறது இது மிகப்பெரிய அதிர்ச்சினை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இது குறித்து புகார் அளித்திறந்த நிலையில் பிறகு அவரது வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிறகு விசாரித்ததில் அதிக வேலை செய்தும் ஐஸ்வர்யா மிகவும் குறைவான சம்பளம் கொடுத்ததாகவும் எனவே நகைகள் திருட ஆரம்பிக்க அதனை பெரிதாக கண்டுகொள்ளாததால் தற்பொழுது அனைத்து நகைகளையும் திருடி அதனை வங்கி பரிவர்த்தனை மூலம் நகைகளை திருடியது உறுதியானது.
பவுன், வைர நகைகள் திருடி உள்ளார்கள் என விசாரணையில் தெரியவந்தது எனவே அந்த வகையில் விசாரணையில் இவர்கள் அதிகமாக திருடியது தெரியவந்த நிலையில் இது குறித்து ஐஸ்வர்யா ரஜினியிடம் கேட்க அதற்காக 2019ஆம் ஆண்டிலிருந்து லாக்கரை திறந்து பார்க்கவில்லை எனவும் எனவே தற்பொழுது 200 சவர நகைகள் கொள்ளை போனதாக மீண்டும் அவர் புகார் அளித்துள்ளார். எனவே தற்போது ஈஸ்வரி இடமிருந்து 50 சவர நகைகள் கைப்பற்ற வேண்டும் என காவல்துறை சார்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது.