சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் இருக்கின்றனர். 14 வருடங்களுக்கு மேல் சிறப்பாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி சில கருத்து வேறுபாடுகள்..
காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் இரு மகன்களும் அவ்வபொழுது அம்மா, அப்பாவுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
நடிகர் தனுஷ் தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா ரஜினி படங்களில் இயக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்தை வைத்து லால் சலாம் என்றும் ஒரு கிரிக்கெட் திரைப்படத்தை எடுக்க உள்ளார் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கேஸ்ட் ரோல் ஒன்றில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படியே இருவரும் தனக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து ஓடுகின்றனர்
குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினி நல்ல நல்ல படங்களை இயக்கியுள்ளார். இந்த படமும் அவருக்கு வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கடந்த சில வருடங்களாக உடற்பயிற்சி யோகா மற்றும் சைக்கிளிங் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினி நடிகர் பிரபுதேவா குறிப்பு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பிரபு அண்ணா ரப்பர் மனிதன் என குறிப்பிட்டார் மேலும் அவருடன் இணைந்து ஒர்க் அவுட் செய்துள்ளார் அந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்.