சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் 40 வருடங்களுக்கும் மேலாக நடித்த ஓடிக் கொண்டிருக்கிறார் இப்பொழுது கூட இளம் இயக்குனர்கள் நெல்சன் திலீப் குமாருடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 169 திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தில் ரஜினியும் வயதான தோற்றத்தில் நடிக்கிறார் அவருடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் பிற இடங்களில் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக லைகா நிறுவனத்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார்.
அதில் முதலாவதாக ரஜினி நடிக்கும் படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி தான் இயக்க இருக்கிறார் இந்த படத்திற்கான பூஜையில் இன்று கோலாகலமாக போடப்பட இருக்கிறது இந்த படத்தில் ரஜினி ஹீரோ கிடையாது இந்த படத்தில் 20 நிமிட காட்சிக்கு மட்டுமே ரஜினி நடிப்பார் என சொல்லப்படுகிறது இந்த படத்தின் ஹீரோ வேறு ஒருவர் தான்..
அதுவும் ஒரு இளம் ஹீரோவை தான் ஐஸ்வர்யா ரஜினி தேர்வு செய்துள்ளார் அந்த ஹீரோ வேறு யாரும் அல்ல தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் தான் கதாநாயகனாக நடிக்க தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது..