இந்த நாற்காலி கிடைக்க கிட்டத்தட்ட 13 வருடமாகிவிட்டது.! ரஜினி மகள் சௌந்தர்யா போட்ட பதிவு.

aishwarya rajini
aishwarya rajini

aishwarya rajini : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் எண்ணற்ற திரைப்படங்கள் வெளியாகி உள்ளன கடைசியாக jailer திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டுமில்லாமல் தலைவர் 171-வது திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாக இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இவர் ஏற்கனவே கோச்சடையான் விஐபி 2 ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார் அது மட்டும் இல்லாமல் கோவா திரைப்படத்தை தயாரித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையுலகில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மீண்டும் களமிறங்கினார் அவர் கேங்ஸ் என்ற வெப் தொடரை தயாரிக்க இருப்பதாக அறிவித்த நிலையில் அந்த வெப் தொடரை ஆபிரகாம் என்பவர் இயக்க இருந்தார்.

அதேபோல் இந்த வெப் தொடரில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க இருந்தார் சமீபத்தில் இதன் பூஜை நடைபெற்ற நிலையில் வெப் தொடரில் நடிக்க இருந்த அனைவரும் ரஜினியிடம் ஆசிர்வாதம் பெற்றார்கள் அமேசான் இணையதளத்திற்காக தான் இந்த வெப் தொடர் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் 13 வருடங்களுக்கு முன்பு 2010 ஆம் ஆண்டு கோவா திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் நாற்காலியில் உட்கார்ந்து அதன் பிறகு இப்பொழுது தான் மீண்டும் தயாரிப்பாளராக உட்கார்ந்து இருக்கிறேன் முன்பை விட இப்பொழுது அதிக ஐடியாக்கள் கிடைத்துள்ளன இன்று முதல் அனைவரின் ஆசிர்வாதத்துடன் படபிடிப்பை தொடங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.