சைமா விருது விழாவில் இரண்டு விருதுகளை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.! எந்தெந்த படத்துக்காக விருது கொடுத்தாங்க தெரியுமா.?

aishwarya-rajesh
aishwarya-rajesh

இந்திய சினிமாவில் ஆண்டுதோறும் சைமா திரைப்பட விருது விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விருது விழா என்றால் அந்த மொழியை தான் பெரிதும் கௌவுர படுத்துவார்கள்  ஆனால் சைமா அவார்ட் தென்னிந்திய திரையுலகில் இருக்கும் அனைத்துமொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்த பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் என தொடங்கி அனைவருக்கும் விருது வழங்கி சிறப்பித்தது சைமா அவார்டு. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருது விழா நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது இந்த விருது விழாவில் தமிழ் படங்கள் வரிசையாக பங்கேற்றன.

தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த படம் சிறந்த நடிகர் நடிகை என தொடங்கி அனைவருக்கும் விருது வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான “சூரரை போற்று” திரைப்படம் மட்டும் சுமார் 7 விருதுகளை தட்டிச் சென்றது. இவரைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை கைப்பற்ற ரெடியாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சைமா விருது விழாவில் இரண்டு விருதை தட்டி தூக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை மட்டும் வைத்துக்கொள்ளாமல் தங்கை, அம்மா போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்து தனது திறமையை நிரூபித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இவருக்கு சைமா இரண்டு விருதை கொடுத்து கௌரவித்துள்ளது. ஒன்று தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க. பெ.ரணசிங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்  நடித்திருந்தார்.

aishwarya rajesh
aishwarya rajesh

அந்த படத்தில் அரியநாச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது முழுத் திறமையையும் வெளி காட்டி மக்களை சந்தோஷ படுத்தினார். இதுதவிர தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்திற்காக சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருதையும் ஐஸ்வர்யா ராஜேஷ் தட்டிப் பறித்தார். இதை தகவலை கண்ட  ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தற்போது வாழ்த்துகளை சொல்லி கொண்டாடி வருகின்றனர்.