சினிமாவுலகில் இளம் நடிகைகள் எடுத்த உடனேயே முதலில் ஹீரோயின் ரோல்களில் நடிக்க ஆசை படுவது வழக்கம் அதுவும் முதல் படத்திலேயே அமைந்துவிட்டால் தொடர்ந்து ஹீரோயினாகவே நடிப்பார்கள் அப்படித்தான் சமீபகால நடிகைகள் இருந்து வந்து உள்ளனர் ஆனால் அவர்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
சின்னத்திரையில் இருந்து படிப்படியாக வெள்ளித்திரை பக்கம் வந்த இவர் முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார் பின் படிப்படியாக தனது திறமையை காட்ட ஒரு கட்டத்தில் ஹீரோயின் அவதாரம் எடுத்தார். ஹீரோயின்னாக நடித்துக்கொண்டு இருந்தாலும் சில படங்களில் எடுத்தவுடனேயே குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடித்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
மேலும் அவரது மார்க்கெட் அவ்வளவுதான் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது திறமையை படிப்படியாக வெளியே காட்டி அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார் சினிமா உலகில் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்துகொண்டு தற்போது அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார்.
தமிழை தாண்டி தற்போது தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன சமீபத்தில்கூட வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்தார் மற்றும் டக் ஜெகதீஷ் போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார் இந்த இரண்டு படங்களிலும் நெருக்கமான காட்சிகளில் நடித்த இருந்தாராம் இனி அதுபோன்ற படங்களை தவிர்ப்பதாக அவர் முடிவெடுத்துள்ளாராம்.
தெலுங்கில் பவன்கல்யாண், ராணா இணைந்து நடிக்கும் படத்தில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க அனுகி உள்ளனர் படத்தின் முழு கதையையும் கேட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரின் கதாபாத்திரம் படத்தில் சில காட்சிகளில் வந்து போவது போல மட்டும் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என முடிவு எடுத்துள்ளார்.
இதற்காக நீங்கள் எவ்வளவு காசு கொட்டிக் கொடுத்தாலும் சரி அந்த படம் எனக்கு தேவையில்லை என ஒற்றைக்காலில் நிற்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். இச்செய்தி கேட்ட ரசிகர்கள் சினிமாவை நன்கு புரிந்து வைத்து இருக்கிறீர்கள் நீங்கள் இன்னும் பல வருடங்கள் தென்னிந்திய சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுப்பீர்கள் என கூறி அவரை வாழ்த்தி வருகின்றனர்.