மெகாஹிட் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். உறுதியான தகவல் இதோ.

ashwariya-rajesh-1
ashwariya-rajesh-1

ஜனவரி மாதம்  மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இப்படம் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதால் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர்.இப்படத்தின் உரிமையை இயக்குனர் ஆர் கண்ணன் பெற்றுள்ளார். இப்படத்தை இவர்தான் இயக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த ரீமேக்கில் யார் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.அந்த பூஜையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் உட்பட இன்னும் பலர் கலந்து உள்ளார்கள்.அவ்வபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ashwariya rajesh
ashwariya rajesh

தற்பொழுது தமிழ், தெலுங்கு என்று பல மொழித் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்பொழுது  உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படம் தான் இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தில் தான் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதன் மூலம் இவருக்கு பல பாராட்டுக்கள் குவிந்தது.

அதுமட்டுமல்லாமல் இவர் நல்ல கதை உள்ள குடும்ப பாங்கான கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.எனவே ரசிகர்கள் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.