மீண்டும் தங்கையாக களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! அதுவும் இந்த முன்னணி நடிகருடனா.!

ashwariya rajesh 4
ashwariya rajesh 4

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகை கலராக அழகாக இருந்தால் மட்டுமே அவர்களை முன்னணி நடிகையாக நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் அழகையும் தாண்டி திறமை இருந்தாலும் முன்னணி நடிகையாக கொடி கட்டிப் பறக்க முடியும் என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர் கருப்பு பேரழகி ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.

இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிரபலமடைந்து இருந்தாலும் இவருக்கென்று சினிமாவில் ஒரு அந்தஸ்தை பெற்றுத்தந்த படம் காக்கா முட்டை தான். இத்திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அந்த வகையில் தொடர்ந்து பல கிராமத்து படங்களில் மிகவும் அடக்கமாகவும் குடும்ப குத்து விளக்கு போல் நடித்து இருந்தார். எனவே இவரின் மீது ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல மரியாதை இருந்தது. ஆனால் இவர் பிரபலமடைய தொடங்கிய பிறகு கவர்ச்சியில் ஆர்வம் காட்டி  தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார்.

இருந்தாலும் இவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவதால் அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஏனென்றால் ஒரு நடிகை தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்றால் அதற்கு கவர்ச்சியும் அவசியம் தான். இந்நிலையில் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாக நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு முன்னணி நடிகர் படத்தில் தங்கையாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். அது வேறு யாருமில்லை தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அல்லு அர்ஜுனனுக்கு தங்கையாக புஷ்பா என்னும் திரைப்படத்தில்  நடித்துள்ளாராம்.இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா. இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்பது கூடுதல் தகவல்.