தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து குற்றங்களையும் எடுத்து கூறும் வகையிலும், பெண்கள் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும் என்பதையும் கூறும் வகையில் தொடர்ந்த அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நிலையில் அந்த வகையில் ஒரு படம்தான் சொப்பன சுந்தரி.
இந்தப் படத்தினை லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.டி சார்லஸ் இயக்க முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் இவரைத் தொடர்ந்து லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைன் கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தினை ஹம்சின் என்டர்டைன்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் புரோமோ வீடியோவை அண்மையில் வெளியிட்டது.
காமெடி கலாட்டா நிறைந்த படமாக உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் சொப்பன சுந்தரி படத்தின் புதிய போஸ்டரை பட குழுவினர்கள் வெளியிட அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தின் போஸ்டர் போலவே சொப்பன சுந்தரி படத்தின் போஸ்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் போஸ் கொடுத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பில் இந்த படத்திற்காக காத்து வரும் ரசிகர்கள் இந்த போஸ்டரை இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தில் கடந்த ஆண்டு டிரைவர் ஜமுனா இந்த ஆண்டு தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திரைப்படங்களுமே பெண்களினை மையமாக வைத்து உருவான படங்கள்.