மொட்டை மாடியில் ஏ ஆர் ரகுமான் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.! செல்லம் யார் கூட இருக்குது தெரியுமா.?

aishwarya-rajesh
aishwarya-rajesh

திரை உலகில் வெற்றி கண்ட பிரபலங்கள் தன்னை எப்பொழுதும் மக்கள் மற்றும் ரசிகர்கள் பேசுபொருளாக வைத்துக்கொள்ள எதையாவது ஒன்றை செய்வது வழக்கம் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ் சினிமாவில் இருக்கிற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்துகொண்டு சிறப்பான ரோல்  எதுவாக இருந்தாலும் அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நடிப்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் கனா, நம்ம வீட்டு பிள்ளை இவருக்கு நல்ல படமாக அமைந்தது இப்படத்தை தொடர்ந்து க. பெ ரணசிங்கம் வேற லெவல் இவருக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படங்களான ஜமுனா டிரைவர், பூமிகா, திட்டம் 2, தே கிரேட் கிட்சன், மோகன்தாஸ், ஐயப்பனும் கோசியும் போன்ற பல்வேறு கையில் இருப்பதோடு நடிக்கவும் ரெடியாக இருக்கிறார்.

ஆனால் தற்பொழுது நிலவும் கொரோனா இரண்டாம் கட்ட கொரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமடைந்துள்ளதால் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வீட்டில் இருந்து கொண்டு பாக்ஸின் மற்றும் தனது அண்ணன் பிள்ளைகளுடன் பொழுதை சிறப்பாக கழித்து வருகிறார்.

இப்படியிருக்க இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் பாடலுக்கு மொட்டைமாடியில் செம குத்தாட்டம் போட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் வீடியோ தற்பொழுது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது அதை பார்த்த ரசிகர்கள் இது சூப்பராயிருக்கு செல்லம் கூறி  லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.