சும்மா கிடந்த மூளையை கசக்கிப் பிழிந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! அதிர்ச்சியில் இயக்குனர்கள்..!

aishwariya-rajesh-02

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி கொண்டு நடிக்கும் நடிகைகளில் சிறந்த நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஆரம்பத்தில் கதாநாயகனுடன் இணைந்து காதல் நடனம் ஆடி இருந்தாலும் தற்போது இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வித்யாசமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தான் நடிக்கும் திரைப்படத்திற்கான கதையை மிகவும் ஆண்டு ஆராய்ந்து அதன் பின்னரே தேர்வு செய்து வருகிறார் இந்நிலையில் இவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது.

அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகனுடன் நடிப்பதற்கு மறுப்பு தெரிவிப்பதாக சமூக வலைதளப் பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது அந்தவகையில் இனிமேல் அவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.

இவ்வாறு வெளிவந்த செய்தியை பார்த்த இயக்குனர்கள் பலரும் பத்து பக்கம்  கட்டுரை போல் கதையை எழுதிக் கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டு வாசலில் காத்துக் கொண்டு நிற்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் வந்த ஸ்ரீதேவியை வெளியே அனுப்புவதா என்ற காரணத்தினால் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது 5 திரைப்படத்தில் கமிட்டாகி விட்டாராம்.

ஆரம்பத்தில் கதாநாயகனுடன் நடித்த பொழுது ஒருவரும் தன்னை திரும்பி கூட பார்க்கவில்லை ஆனால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் நடித்த பிறகு தன்னை அனைவரும் தூக்கி கொண்டாடுவதை கவனித்த நமது நடிகை சரியான முடிவு எடுத்துள்ளார் .

அந்த வகையில் கதாநாயகனுடன் நடித்தால் என்னதான் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்தாலும் அவை அனைத்தும் கதாநாயகனுக்கு தான் பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுக்கிறது அந்த வகையில் தாமே தனித்து நடித்தாள் இவை அனைத்து புகழும் தன்னையே வந்து சேர்வதன் காரணமாக இப்படிப்பட்ட முடிவை ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்துள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் எப்பொழுதும் வாங்கும் சம்பளத்தை விட தற்போது பல லட்சம் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளதாகவும்  கூறப்படுகிறது. மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது திரில்லர் கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம்.

aishwariya-rajesh-01
aishwariya-rajesh-01