சினிமா உலகில் உச்சத்திரமாக இருக்கும் நடிகர் இளம் வயதில் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கின்றன. இதுவரை நாம் ஏகப்பட்ட நடிகர், நடிகைகளை பார்த்திருப்போம்..
அதுபோல தற்போது தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் தனது தோழிகளுடன் இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தான் தற்பொழுது வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் சின்னத்திரையில் பணியாற்றினார் அதன் பிறகு வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார்
சினிமாவில் முதலில் குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல் போன்றவற்றில் தலைக்காட்டி ஓடிக்கொண்டிருந்த இவர் ரம்மி திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதன் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல வாய்ப்புகள் குவிந்தது அதை ஒவ்வொன்றையும் திறன் பயன்படுத்தி வெற்றி கண்டார்.
ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து தற்போது டாப் நடிகர்களுடன் நடிப்பது மற்றும் சோலோவாக நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா பிரபலங்கள் பலரும் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் தற்போது டிரைவர் ஜமுனா, மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, இடம் பொருள் ஏவல், துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் இருகின்றன
மேலும் மலையாளம் போன்ற பிற மொழிகளில் நடிப்பு வருகிறார்கள் இப்படி இருக்கின்ற நிலையில் இவர் தனது தோழிகளுடன் இவர் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பவும் சரி இப்பவும் சரி செம க்யூட்டாக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.