ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு, என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது பணியை ஆரம்பித்தார். அதன்பிறகு கலைஞர் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த மானாட மயிலாட என்ற போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு, நீ தானா அவன், என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு, அவர்களும் இவர்களும், அட்டகத்தி, ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை, சாமி ஸ்கொயர், செக்கச் சிவந்த வானம், வடசென்னை, கனா, இன்னும் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில் சமீப காலங்களாக இணையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை முறுக்கேற்றி வருகிறார்.
அந்த வகையில் தற்போது மெல்லிய புடவையில் ரசிகர்களை திணறடிக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.