ஆட்டோவில் ஐஸ்வர்யா ராஜேஷிடம் அத்துமீறிய மர்ம நபர்.? டிரைவர் என்ன செய்தார் தெரியுமா.?

Aishwarya rajesh
Aishwarya rajesh

Aishwarya rajesh : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்பத்தில் நடித்த காக்கா முட்டை, ரம்மி, தர்மதுரை, க.பெ. ரணசிங்கம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து பெரிய அளவில் பேசப்பட்டார்.

பலரும் நயன்தாராவுக்கு போட்டியாக இவர் வந்துவிட்டார் என பல கமெண்ட்களை அடித்தனர். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு திடீரென சரிவு ஆரம்பித்துள்ளது. ஆம் இவர் கடைசியாக நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற ஒரு சில திரைப்படம் தோல்வி படங்களாக மாறின.

இதிலிருந்து மீண்டு வருவதற்கு தற்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார் இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைதள பக்கங்களில் மற்ற நடிகைகள் போல இவரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.  இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து உள்ளார் அவர் சொன்னது..

நான் கல்லூரியில் படிக்கும் பொழுது தன்னுடைய ஃபிரண்ட் வீட்டிற்கு ஷேர் ஆட்டோவில் சென்று வீடு திரும்பி கொண்டிருந்த போது ஆட்டோவில் இருந்தவர் நபர் நெருங்கி வந்து தன் தொடையின் மீது கை வைத்ததாகவும் அப்பொழுது ஆட்டோவை நிறுத்த சொல்லி அந்த நபருக்கு நடுரோட்டில் நிக்க வைத்து இந்த மாதிரி ஆள் எல்லாம் ஏன் ஆட்டோவில் ஏன் ஏத்துக்கிறீர்கள்.

என அந்த ஆட்டோ டிரைவரிடம் கேட்ட பொழுது அந்த நபரை திட்டி அனுப்பி விட்டார் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள்  இங்கி பெண்களுக்கு பாதுகாப்பே  கிடையாது  எனக் கூறி கமெண்ட் அடித்து இந்த செய்தியை பெரிய அளவில் பரப்பி வருகின்றனர்.