தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் சமீப காலமாக நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்த வருகிறார் அந்த வகையில் புஷ்பா, வாரிசு போன்ற படங்கள் நல்ல விமர்சனத்தை பற்றி வசூல் ரீதியாக வெற்றி கண்டதை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படமும் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தரும் என கூறப்படுகிறது. புஷ்பா படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகை ராஷ்மிகா மந்தனா இரண்டாவது பாகத்திலும் தனக்கான கேரக்டரில் பின்னி பெடல் எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..
புஷ்பா படத்திலிருந்து இடம்பெற்றிருக்கும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது.. விஜய் தேவர் கொண்ட உடன் தான் நடித்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது தனக்கு வருத்தம்.
அளிப்பதாகவும் நல்ல தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டும் என தனக்காக ஆசை இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தநா நடித்த ஸ்ரீவள்ளி கேரக்டர் தனக்கு கிடைத்தால் நிச்சயம் நடித்திருப்பேன் என கூறியவர் அந்த கேரக்டரில் நடிகை ராஷ்மிகா அருமையாக நடித்திருந்தாலும்..
அது தனக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் அவரைவிட சூப்பராக நடித்திருப்பேன் அது எனக்கு பொருத்தமான கேரக்டர் என பேசியிருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி பேசியது தற்பொழுது சர்ச்சையாக வெடித்துள்ளது ரசிகர்கள் பலரும் தொடர்ந்து பல்வேறு விதமான கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர்.