சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதனைத்தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் தனது திறமையை காட்டி அதன் காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் ஹீரோயின் அந்தஸ்தை பெற்று அசத்தினார்.
அதன் பின் இவரது பயணம் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு அசுர வளர்ச்சியை எட்டியது அந்த அளவிற்கு கிராமத்தில் கதாபாத்திரமாக ஒன்றி அசத்தினார் மேலும் பார்ப்பதற்கு கிராமத்து பெண் போல் இருந்ததால் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
திருடன் போலீஸ், தர்மதுரை, மனிதன், ரம்மி, செக்கச்சிவந்த வானம், காக்கா முட்டை போன்ற பல்வேறு திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததோடு மட்டுமில்லாமல் இவரது நடிப்பு மற்றவர்கள் ரசிக்கும் படியும் இருந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். தமிழை தாண்டி தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்போ உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்ற நடிகைகள் போல் இவரும் பந்தா போடுவதோடு நாம் எதிர்பார்க்காத அளவுக்கு கிளாமராக வலம் வருகிறார் அதிலும் தமிழை தாண்டி தெலுங்கில் இவர் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சியை காட்டி வருகிறார் இதனால் தமிழ் ரசிகர்கள் ஏமாந்து போய் இருக்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் படங்களில் அமைதியாக நடித்துவிட்டு இருக்கின்ற இடம் தெரியாமல் போய்க் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக பல்வேறு தேவையில்லாத இடத்தில் பேச்சுக்களை பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கின்றனர். ஒரு இயக்குனர் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்து கதை கூறியுள்ளார். பின் கதை மொக்கையாக இருக்கும் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அதேபோல லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் அப்போது படப்பிடிப்பின் போது தன் உதவியாளரை சுடு தண்ணீர் எடுத்து வர சொல்லியுள்ளார். அவரும் கேரவனுக்குள் சென்று உடனடியாக தண்ணீரை எடுத்து வந்துள்ளார் இருப்பினும் சற்று தாமத காரணத்தினால் ஐஸ்வர்யா ராஜேஷ் கோபட்டுள்ளார் மேலும் அவரை பளார் என்று கன்னத்தில் அறைந்து விட்டார்.
இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் மீது பலரும் அதிருப்தியில் இருக்கின்றனராம். இதை அவர் வெகு விரைவில் உணர்ந்துகொண்டு சர்ச்சைகளில் சிக்காமல் ஆரம்பத்தில் எப்படி இருந்தோமோ அதுபோல் பயணித்தால் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.