சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பின் படிப்படியாக வெள்ளித்திரை பக்கம் அடியெடுத்து வைத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ் வெள்ளித்திரையிலும் எடுத்த உடனேயே இவர் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடிக்க முடியாததால் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தலை காட்டத் தொடங்கினார்.
அந்த வகையில் இவர் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் காக்கா முட்டை படத்தில் அம்மாவாக நடித்து ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் இடம்பிடித்தார் அதன்பிறகு இவருக்கு சினிமா உலகில் ஏறுமுகமாகவே இருந்தது இவர் தமிழில் விஜய்சேதுபதியுடன் கடைசியாக இணைந்து க. பெ. ரணசிங்கம் படத்தில் நடித்து அசத்தினார்.
அதன்பிறகு இவருக்கு தெலுங்கு பக்கமும் தற்போது நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து வேர்ல்டு ஃபேமௌஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்தார். நடிப்புக்கு பேர்போன நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தற்பொழுது விருதுகள் வாங்க ஆங்காங்கே கூப்பிடுவதால் விருதுகளை தட்டி தூகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த தென்னிந்திய சைமா விருது விழாவில் அவருக்கு இரு விருதுகளை கொடுத்து அழகி படுத்தியது. வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்திற்காக ஒரு அவார்டும் மற்றொன்று க. பெ. ரணசிங்கம் படத்திற்காக இன்னொரு அவார்டும் அவருக்கு கொடுக்கப்பட்டது. இதனால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை தற்போது ரசிகர்களும் புகழ் தள்ளுகின்றனர்.
மேலும் சைமா விருது விழாவிற்காக அவர் மாடர்ன் உடையில் சென்று இருந்தார் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையதளப் பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதோ அழகில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்.