ஒரே ஒரு படத்தினால் தன்னுடைய இடத்தை ப்ரியா பவானி சங்கருக்கு விட்டு தந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.!

priya-bhavani-shangar
priya-bhavani-shangar

தென்னிந்திய சினிமாவில் அழகாக இல்லாத காரணத்தினால் பலராலும் நிராகரிக்கப்பட்டு பிறகு தன்னுடைய கடின உழைப்பினால் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் சினிமாவின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடர்ந்து தற்பொழுது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளிலும் மாறி மாறி நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து குடும்ப பாங்கான திரைப்படங்களில்  நடித்து வந்த நிலையில் தற்பொழுது தெலுங்கு திரைப்படங்களில் கிளாமர் அதிகமாக இருக்கும் திரைப்படங்களில் நடித்து பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது தமிழை விடவும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் இதன் மூலம் இவருக்கு தற்பொழுது அதிகபட்ச சம்பளம் கிடைத்து வருகிறது.

இவ்வாறு தற்பொழுது இவர் தொடர்ந்து நடித்துவரும் நிலையில் தமிழில் இவருடைய இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக பிரியா பவானி சங்கர் பிடித்து வருகிறார் என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் தற்பொழுது தமிழில் இவர் இந்தியன் 2, பொம்மை, பதுதல உள்ளிட்ட ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

மேலும் இவ்வாறு தமிழில் பிரபலமடைந்துள்ள இவர் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார் அந்த வகையில் பிரபல நடிகர் சத்ய தேவ் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியா பவானி சங்கர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்பார்த்ததை விட இவருக்கு நல்ல சம்பளம் இந்த படத்தில் பேசப்பட்டு இருக்கிறதாம்.

உதாரணமாக தமிழில் இரண்டு படங்களில் நடித்தால் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாரோ அந்த சம்பளத்தை தெலுங்கு ஒரே படத்தின் மூலம் வாங்கி வருகிறாராம். இவ்வாறு சம்பளம் மட்டும் அல்லாமல் சினிமாவில் இவருடைய அந்தஸ்தம் உயர்ந்துள்ளது மேலும் இதனை தொடர்ந்து பிரியா பவானிசாகர் அடுத்த அடுத்த தொடர்ந்து ஏராளமான தெலுங்கு முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம் இதனால் மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் விட தமிழில் பிரியா பவானி சங்கருக்கு தான் அதிக முக்கியத்துவம் தந்து வருவதாகவும் கூறப்படுகிறது எனவே ஐஸ்வர்யா ராஜேஷ் பிரியா பவானி சங்கரை பின்னுக்கு தள்ளி உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் சமூகத்திற்கு நல்ல கருத்து தரும் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.