‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டர்.! என்ன காரணம் தெரியுமா?

vikram
vikram

Aishwarya Rajesh: நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாக கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்.

இந்த படத்தின் ஒட்டுமொத்த பணியும் நிறைவடைந்திருக்கும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தின் சூட்டின் கடந்த 2017ஆம் ஆண்டே துவங்கப்பட்ட நிலையில் அதே ஆண்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இந்த படம் தற்பொழுது மீண்டும் துவங்கப்பட்டு விரைவில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்களும் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் கௌதம் மேனன் மாறி இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்த நிலையில் அவருடைய காட்சிகள் மட்டும் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் பாடல் ஒரு மனம் பாடலில் ரித்து வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இடம் பெற்று இருந்தனர். தற்பொழுது அந்தப் பாடலும் படத்தில் இடம்பெறாது என்றும் யூட்யூபில் மட்டுமே இருக்கும் என படக்குழு சார்பில் கூறப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான இரண்டாவது பாடலில் யூடியூப் பக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தின் நீளம் காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு விக்ரம்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியான மகான் படத்தில் வாணிபோஜன் இடம் பெற்ற காட்சிகள் நீக்கப்பட்டது அதேபோல் இந்த வரிசையில் தற்பொழுது ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.