தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த கானா, கா பே ரண சிங்கம் போன்ற திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் இவருக்கு குடும்பபாங்கான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதன் காரணமாக எளிதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.
பொதுவாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அதிக அளவு கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது மலையாளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த தி கிரேட் இந்தியன் கிட்சன் என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
மேலும் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்ப்புகள் தெலுங்கு சினிமாவில் அதிகரித்தது மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் விளம்பரங்களுக்கு கூட இவர் அடக்க ஒடுக்கமாக வருவது வழக்கம்.
ஆனால் சமீபகாலமாக தெலுங்கு படங்களுக்கு செல்லும் பொழுது மிகவும் கிளாமரான உடை அணிந்து ஐஸ்வர்யா ராஜேஷ் செல்லுவது வழக்கமாக உள்ளது அது மட்டும் இல்லாமல் இனி இவருடைய திரைப்படங்களில் கவர்ச்சியையும் பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில் தெலுங்கு சினிமாவை பொருத்தவரை கவர்ச்சி காட்டினால் மட்டுமே திரை உலகில் நீண்ட நாள் நடிக்க முடியும் ஆகையால் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என பலரும் கூறி வருகிறார்கள்.