தற்பொழுது தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் இருந்து வருவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் படுக்கை அறை இல்லாமலும் ஆக்சிஜன் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே தற்போது சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள் என்று பலரும் தங்களால் முடிந்த நிவாரண உதவியை செய்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர்களும் லட்சக்கணக்கில் நிதி உதவி செய்து வருகிறார்கள்.
முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், நெப்போலியன் இயக்குனர் ஷங்கர், முருகதாஸ் உள்ளிட்ட இன்னும் பலரை கூறிக்கொண்டே போகலாம். ஆனால் நடிகர்கள் இப்படி கொடுத்தாலும் நடிகைகள் ஒருவர் கூட நிவாரண உதவி செய்யாமல் இருந்து வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் கருப்பு பேரழகி முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் ரூபாய் ஒரு லட்சம் நிவாரண உதவியாக கொடுத்துள்ளார். இவரைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் பூமி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிதி அகர்வால் ஒரு லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக கொடுத்துள்ளார். இவர் சமீபத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி கோடியில் சம்பளம் வாங்கும் பல நடிகைகள் சினிமாவில் இருக்கிறார்கள் ஆனால் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்கவில்லை என்பதால் ரசிகர்கள் பலர் வெறுப்பில் உள்ளார்கள்.