திறமை இருந்தால் எப்பொழுதும் வாய்ப்பு உண்டு என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக மணிரத்தனம் அவர்களை கூறலாம்.
80,90 காலகட்டங்களில் தனது திரையுலக பயணத்தை தொடர்ந்தவர் தற்போது திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பதோடு மட்டுமில்லாமல் தற்போதும் பல படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகிறார்.
காலத்திற்கு ஏற்றவாறு தனது புதிய பரிமாணத்துடன் வலம் வருவதால் தற்போதும் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
சமிபகாலமாக புதுமுக இயக்குனர்கள் தான் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர் நாம் பார்த்து வருகிறோம் பெரும்பாலான பழைய இயக்குனர்கள் தற்பொழுது சினிமா இண்டஸ்ட்ரியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக படங்களை இயக்குவதை விட்டு காணாமல் போகின்ற நிலையில் இவர் மட்டும் தன்னந்தனியாக சினிமா உலகில் தற்போதும் போராடி கொண்டு வருகிறார்.
இவர் கடைசியாக இயக்கிய கடல்,ஒ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பல முன்னணி ஹீரோ, ஹீரோயின்களை வைத்து பொன்னின் செல்வன் என்ற கதையை இயக்கி வருகிறார்.
பல பிரபலங்கள் இத்திரைப் படத்தில் நடிப்பதால் படத்தின் பட்ஜெட் மிகப்பெரிய அளவில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் இது வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது.
கொரனோ தொற்று காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட உள்ளது இதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் அங்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த க்யூட் புகைப்படம்.
#AishwaryaRaiBachchan has arrived at Ramoji Film City for the #PonniyinSelvan shoot. pic.twitter.com/So46XEn5zD
— Films and Stuffs (@filmsandstuffs) January 26, 2021