தவறாக கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்.. ஷாக்கான நடிகை ஐஸ்வர்யா ராய்.! அதுக்குன்னு இப்படியே கேட்குறது

ashwariya-rai
ashwariya-rai

நடிகர் கார்த்திக்,விக்ரம், ஜெயம் ரவி பார்த்திபன் மற்றும் திரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணிகள் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தை இயக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக நினைத்து வந்த மணிரத்தினம் தற்பொழுது அதிக பொருட்ச அளவில் இந்த திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள், டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.மேலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது இப்படிப்பட்ட நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அந்த வகையில் நடிகர்களான கார்த்தி, ஜெயம் ரவி,சியான் விக்ரம், ஏ ஆர் ரகுமான், பிரபு, நாசர்,சரத்குமார் ஆகியோர்களும் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, அதிதி ராவ் ஆகியோர் கலந்து கொண்டார்கள் மேலும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் ஆகியோர்கள் பங்கு பெற்றனர்.

மேலும் தமிழ் சினிமாவில் நீண்ட காலங்களுக்கு பிறகு இந்த நிகழ்ச்சிக்கு பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது மேலும் இதில் கலந்துக் கொண்ட அனைத்து பிரபலங்களும் மிகவும் கலகலப்பாக பேசி இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் தவறான கேள்வியை கேட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் ரீீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் இவஙநந்தினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பொழுது இவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டனர். அதில் ஒருவர் மணியத்தினத்துடன் இது உங்களுக்கு இரண்டாவது படம் இதில் பணியாற்றியது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார்.

இதை கேட்டு ஷாக்கான ஐஸ்வர்யாராய் எனது இரண்டாவது படமா நான் அவருடைய எத்தனை திரைப்படங்களில் நடித்து இருக்கேன் நீங்க குழப்பத்தில் இருக்கீங்கன்னு நினைக்கிறேன் நல்லா போய் செக் பண்ணி பாருங்க என்னுடைய சினிமா கேரியர் ஆரம்பித்ததே மணிரத்தினம் சாரால் தான். அதற்கு பின்னர் இவர் இயக்கிய குரு, ராவணன், இப்போ பொன்னியின் செல்வன் படத்தில் ஒர்க் பண்ணி இருக்கேன் என மணிரத்தினத்துடன் இணைந்து பணியாற்றிய படங்களை லிஸ்ட் போட்டு கூறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.