தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் இவர் தற்பொழுது வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை முடித்தவுடன் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதற்காக விக்னேஷ் சிவன் தற்பொழுது கதையை எழுதிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
என்ற திரைப்படத்தில் முதலில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவை தான் நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்திருந்தார் ஆனால் தற்பொழுது திடீரென நயன்தாரா இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என தகவல் கிடைத்துள்ளது நயன்தாராவுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய் என்ற திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என தகவல் கிடைத்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே சற்று கோபத்தை ஏற்படுத்தியுள்ளது அதற்கு காரணம் என்னவென்றால் அஜித் நடிப்பில் 2000 ஆண்டு வெளியாகிய கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது அந்த திரைப்படத்தில் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு அஜித் என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள் நடிகை ஐஸ்வர்யா ராய் அந்த சமயத்தில் டாப் நடிகையாக இருந்து வந்தார். உலக அழகியாக வலம் வந்து சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தார்.
அந்தத் திரைப்படத்தில் முதலில் கதை படி அக்கா கதாபாத்திரத்தில் நடித்த தபுதான் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க இருந்தது தங்கையாக ஐஸ்வர்யா தான் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க இருந்தது ஆனால் இளம் நடிகரான அஜித்துடன் ஜோடி சேர ஐஸ்வர்யா ராய் மறுத்துவிட்டார் அந்த சமயத்தில் பல தகவல்கள் வெளியானது அதன் காரணமாக கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அக்கா கதாபாத்திரத்தில் நடித்த தபு அஜித்திற்கு ஜோடியாக மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் தற்பொழுது அஜித்தின் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதால் அப்பொழுது நடிக்க மறுத்ததை நினைத்து தற்பொழுது ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் மீதும் கோபத்தில் இருக்கிறார்கள்.