பழிவாங்கும் ராணியாக நடித்துள்ள ஐஸ்வர்யாராய்..! வெளிவந்த புதிய போஸ்டரை பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்.!

aishwarya-rai-

ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்ற பிறகு பாலிவுட் சினிமாவில் இவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தது. அங்கு தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து எத்தனை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார் மேலும் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமமாக பிடித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் ரஜினியின் எந்திரன், விக்ரமின் ராவணன், பிரசாந்து உடன் ஜீன்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் நீண்ட இடைவேளைக்கு பிறகு  தமிழில் தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இவருடன் இணைந்து இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட என பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை மிகப் பிரமாண்ட பொருட்ச அளவில் லைக்கா நிறுவனம் எடுத்துள்ளது இந்த படத்தின் டைட்டில் மற்றும் மிகப்பெரிய அளவில் நடத்த மணிரத்தினம் திட்டம் தீட்டி உள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்கள் மற்றும் மக்களை கவர்ந்திழுக்க படக்குழு தொடர்ந்து பொன்னின் செல்வன் படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் படக்குழு ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கும் கெட்டப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது மேலும் அதில் சில பதிவுகளையும் போட்டுள்ளது. அதில் பழிவாங்கும் முகம் அழகானது, பழுவூர் ராணி நந்தினி சந்திக்கவும் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.