இந்தியாவில் எத்தனை அழகிகள் இருந்தாலும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது ஐஸ்வர்யாவை தான்.இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்றார். இவரது அழகிற்கே பல கோடி ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக தற்போதுவரை வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழில் 1997 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ”இருவர்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்குள் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவே அவரை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,ராவணன், எந்திரன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு என பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்பொழுது வரையிலும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா அவர்கள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் நடிகையாக பணியாற்றி வலம் வந்து இருக்கிறார். இவர் 2007 ஆம் ஆண்டு ஹிந்தியில் முன்னணி நடிகரான அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு ஒரு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு பிறகும் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி வந்து கொண்டிருக்கிறார் இந்த நிலையில் அவர் நடித்து வெளிவராத படத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது 1997ஆம் ஆண்டு ”ராதேஷ்யம் சீதாராம” என்ற திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா நடித்திருந்தார்.ஆனால் சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை அந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்புக்கு உள்ளாக்கியது.
தற்பொழுது ஐஸ்வர்யா ராய் அவர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்திசுரேஷ், திரிஷா, அமிதாப்பச்சன், மோகன்பாபு, ஜெயராம், ஐஸ்வர்யா மேனன் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் நடிக்க உள்ளனர் இப்படம் மிகப்பெரிய ஒரு பட்ஜெட்டில் உருவாகி உள்ளது இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் தமிழ் ,தெலுங்கு மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#AishwaryaRaiBachchan #actress pic.twitter.com/QIyroelva5
— Tamil360Newz (@tamil360newz) April 8, 2020