தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய் இவர் 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்தி, தமிழ் பெங்காலி ,ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக மணிரத்தினத்தின் இருவர் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.
1998-ஆம் ஆண்டு ஜீன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். பெரிதாக இவர் தமிழில் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடித்த ஒரு சில தமிழ் திரைப்படங்கள் மூலமாகவே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும் இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்திலும் ராவணன், எந்திரன் ஆகிய திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.
ஆனால் ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய் 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடித்த திரைப்படங்கள் காலாகாலத்திற்கும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்.
மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார் அந்த வகையில் தன்னுடைய மகளின் புகைப்படத்தை கூட சமீபத்தில் வெளியிட்டார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யாராய் வருடந்தோறும் பாரிஸில் நடக்கும் ஃபேஷன் வீக்கில் கலந்து கொள்வது வழக்கம் அந்த வகையில் இந்த முறை தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் பாரி சென்றுள்ளார்.
அங்கு நடந்த பேஷன் வீக் விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்களும் கலந்து கொண்டுள்ளார் அவர் வெள்ளை நிற கவுனில் ராம்ப் வாக் செய்துள்ளார் இதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.