இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளவர் ஆனால் அவரது கனவு படம் பொன்னியின் செல்வன் தான் அந்த படத்தை எடுக்க பல தடவை முயற்சித்த இருந்தாலும் தோல்வியை மட்டுமே சந்தித்தார்.. இருப்பினும் அந்த படத்தை எடுத்த ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தால் ஒரு வழியாக கடைசியாக லைக்கா நிறுவனத்துடன்..
சரியான முறையில் கைகோர்த்து பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, கார்த்தி, பிரபு, சரத்குமார், பார்த்திபன்.
மற்றும் பிரகாஷ் ராஜ், விக்ரம், ஜெயராம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர் இந்த படத்தில் இருந்து இதுவரை டிரைலர் பாடல்கள் போஸ்டர் போன்றவை வெளிவந்து மக்கள் மத்தியில் வைரலாகின இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில்..
இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் ஆகியவை வெளியிடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்காக ரஜினி கமல் மற்றும் பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர் அந்த வகையில் பாலிவுட் டாப் நடிகை ஐஸ்வர்யா கலந்து கொண்டார்.
அப்பொழுது இவரது வருகையை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கத்தி வரவேற்றனர் வந்த உடனேயே ஐஸ்வர்யா இயக்குனர் மணிரத்தினத்தை பார்த்து ஓடி வந்து கட்டிப்பிடித்தாராம் பின் மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினினையும் கட்டி தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.