இயக்குனர் மணிரத்தினத்தை அலையவிடும் ஐஸ்வர்யா ராய் – கூட சேர்ந்து சுத்தும் பிரபல நடிகர்.? என்னடா நடக்குது..

ponniyin selvan
ponniyin selvan

இயக்குனர் மணிரத்தினம் 90 காலகட்டங்களில் இருந்து இப்போதுவரையிலும் சிறப்பான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார் இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். நாவலை மையமாக வைத்து  இத்திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார்.

முதல் பாகம் தற்போது உருவாகி முடித்து உள்ளார் இருப்பினும் ஒரு சில முக்கிய சீன்கள் எடுத்தால் படம் இன்னும்  சிறப்பாக இருக்கும் என்பதற்காக ஒரு சில நடிகர்களை வைத்து காட்சிகளை எடுக்க மணிரத்தினம் திட்டம் போட்டுள்ளார். இது இப்படி இருக்க இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் கடைசி 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து உள்ளார்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அனைத்து நடிகர் நடிகைகளையும் அனுப்பிவிட்டார் அவர்களும் மற்ற வேலைகளை பார்க்க தொடங்கியுள்ளனர் இப்படி இருக்கின்ற நிலையில் படத்தில் ஒரு சில காட்சிகள் இன்னும் எடுத்து அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்ற காரணத்தினால் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரையும் மணிரத்தினம் அழைத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராயிடம் முதலில் பேசியுள்ளார் மணிரத்தினம் நீங்கள் சென்னை வந்தால் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டியது என கூறினார்.  ஆனால் ஐஸ்வர்யா ராய் நான் மும்பை வந்து விட்டேன் இனி என்னால் சென்னை வர முடியாது நீங்கள் வேண்டுமானால் மும்பை வந்து அந்த காட்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார் இதனையடுத்து மணிரத்தினம் ஜெயம் ரவியை சந்தித்துள்ளார் ஜெயம் ரவி அடுத்த படத்தில் நடிப்பதால் வளர்த்துவிட்ட முடியை  கட் பண்ணி விட்டாராம்.

மணிரத்தினம் போனால் போகட்டும் டோப்பா முடியை வைத்து படத்தை எடுத்துக் கொள்ளலாம் என கூறி பொன்னியின் செல்வன் படத்தின் காட்சிகளை எடுக்க மணிரத்னமும் ஜெயம்ரவியின் மும்பை புறப்பட்டு சென்று ஐஸ்வர்யா ராயை சந்தித்ததும் படத்தின் ஷூட்டிங் தொடங்க ரெடியாக இருக்கிறார்கள்.