மாடல் அழகியாக இருந்து பின் சினிமாவுலகம் பக்கம் அடியெடுத்து வைத்தவர் ஐஸ்வர்யா ராய்.மணிரத்தினம் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் இருவர் இந்த படத்தின் மூலம்தான் நடிகை ஐஸ்வர்யாராய் அறிமுகமானர்.
அதன் பிறகு இவர்ருக்கு பாலிவுட் பக்கம் பெரிய வரவேற்பு இருந்ததால் அங்கேயே செட்டிலாகி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இருப்பினும் அவர் தமிழ் சினிமா பக்கம் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் படங்களில் நடித்து மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ராய் ஹிந்தியில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றனர் ஐஸ்வர்யாராய்க்கு தற்பொழுது 47 வயதாகிறது சமீபத்தில்கூட நடைபெற்ற பாரீஸ் ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வகைகளையும் நீங்கள் வளைவுகளுடன் செம அழகாக இருக்கிறீர்கள் என கூறி புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்