தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது. கர்ணன் திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இத்திரைப்படத்தை கலைபுலி எஸ் தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். தனுஷின் அசுரன் திரைப்படத்தையும் எஸ் தாணு தான் தயாரித்து இருந்தார். அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் தனது இரண்டாவது படமான கர்ணன் திரைப்படத்தில் தனுஷ்கே வாய்ப்பு கொடுத்தார்.
இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜீஷா விஜயன் நடித்திருந்தார். அதோடு இத்திரைப்படத்தில் தனுஷின் தாதா கேரக்டரில் நடித்திருந்தா மலையாள நடிகரான லால் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.
இத்திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். அந்த வகையில் கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோடு கூட்டி வாருங் இந்தப் பாடல் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் தனுஷ் படம் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்றுள்ளதால் தனது மனைவி மற்றும் மகன்களுடன் அமெரிக்கா தியேட்டரில் கர்ணன் திரைப்படத்தை பார்த்துள்ளார்.
இந்நிலையில் தனுஷின் மனைவி ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோடு கூட்டி வாருங் என்ற பாடல் வரியுடன் தனுஷுடன் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.