Aishwarya Lekshmi latest news : சினிமா உலகில் கவர்ச்சி மிக முக்கியமானதாக மாறி உள்ளது. அறிமுக நடிகைகள் தொடங்கி டாப் நடிகைகள் வரை படங்களில் சின்னதாவது கவர்ச்சியை காட்டி விடுகின்றனர் காரணம் படத்தின் கதைக்காகவோ அல்லது தனது ரசிகர்களுக்காகவோ இதை செய்கின்றனர்.
இந்த நிலையில் வளர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சினிமாவில் கவர்ச்சி முக்கியம் என கூறியிருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ஐஸ்வர்யா லட்சுமி மாடலாக இருந்து பின் விஷால் நடிப்பில் உருவான ஆக்சன் படத்தில் நடித்த அறிமுகமானார். படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து தனுஷின் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தார்.
இந்த படம் ஓரளவு பெயரை இவருக்கு வாங்கி தந்தது. அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் அள்ளினார் அப்படி இவர் நடித்த கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் பார்ட் 1,2 போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழையும் தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் சினிமா உலகில் பிஸியாக காட்டி நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்..
ரசிகர்களுடன் உரையாடுவது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதுமே ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகையாக ஐஸ்வர்யா லட்சுமி இருது வருகிறார் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் கவர்ச்சி முக்கியம் என தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது இன்றைய சூழ்நிலையில் நடிகைகள் கவர்ச்சிக்கு மாறுவது கட்டாயம் ஆகிவிட்டது கவர்ச்சி இல்லை என்றால் சினிமாவில் நீடிக்க முடியாது என தெரிவித்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.