தனுசை வெறுப்பேற்றி பார்க்க பிரபல நடிகருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா.

aishwarya-simbu
aishwarya-simbu

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜகமே தந்திரம், கர்ணன், அசுரன் போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்து வந்த தனுஷின் மாறன் திரைப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகின்றன.

சினிமாவில் இப்படி பல முக்கிய திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் தனுஷ் குடும்ப வாழ்க்கையில் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு இரு மகன்கள் உள்ள நிலையில் கடந்த 18 வருடமாக சிறப்பாக வாழ்ந்து வந்த இவர்கள் சமீபத்தில் விவாகரத்து செய்தியை அறிவித்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர்களை சமாதானம் செய்து வைக்க ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மற்ற உறவினர்கள் போன்ற பலரும் பேசி பார்த்த நிலையில் ஐஸ்வர்யாவும் தனுஷும் விவாகரத்து விஷயத்தில் பிடிவாதமாக இருந்து வருகின்றன. மற்ற பலரும் இவர்களை நினைத்து கவலைப்பட்டு வரும் நிலையில் ஆனால் அவர்களோ அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றன.

அந்த வகையில் தனுஷூம் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அவரை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் பாடல் வெளியிடுவது திரைப்படம் இயக்குவது என அவர் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா அடுத்து இயக்க உள்ள திரைப்படத்தில் நடிகர் சிம்புவை நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளிவரும் என தெரியவருகிறது. ஐஸ்வர்யா தனுஷை வைத்து முதல் படமாக 3 திரைப்படத்தை இயக்கியவர் அதனை தொடர்ந்து வை ராஜா வை போன்ற இரு படங்களை தமிழில் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.