தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பின் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் சினிமா வாழ்க்கை குடும்பம் என இரண்டிலும் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தனர் இருப்பினும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த ஜனவரி 17ஆம் தேதி நள்ளிரவில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிகிறோம் என அதிரடியாக அறிவித்தனர்.
இச்செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. மேலும் இருவர் பற்றியும் பேச்சுக்கள் இணையதள பக்கங்களில் தொடர்ந்து வெளி வந்தன அதுவும் குறிப்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்தது ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக உட்கார்ந்து பேசி விவாகரத்து செய்தியை அறிவித்துவிட்டனர் என எல்லாம் கூறினர்
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை எப்படியோ இருவரும் பிரிந்து விட்டனர் இவர்களை சேர்த்து வைக்க ரஜினியை குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்தனர் ஆனால் ஆரம்பத்தில் இருவரும் கோபத்தில் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டு கோபத்தில் சேர்ந்து வாழ முடியாது என கூறினர்.
இதனால் ஐஸ்வர்யாவுக்கு பெருமளவு பாதிப்பா என்றால் இல்லை ஆனால் தனுஷுக்கு சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்து சறுக்களை சந்தித்தார். ஒரு கட்டத்தில் நடிகர் தனுஷ் முன்வந்து இனி நாம் சேர்ந்து வாழ்ந்துவிடலாம் எந்த பிரச்சனையும் இருக்காது பழசை எல்லாம் மறந்து விட்டு புதுசாக வாழ்க்கையை தொடங்கலாம் என கூறி உள்ளார்
அதற்கு ஐஸ்வர்யாவும் சம்மதம் தெரிவித்து தற்போது இணைந்துள்ளதாக கூறப்படுகிறது இதனால் ரஜினியின் குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது மேலும் இதை வெளி உலகத்திற்கு சொல்ல ஜூலை 28ஆம் தேதியை செலக்ட் செய்துள்ளனர் காரணம் ஜூலை 28 தனுஷின் பிறந்த நாள் என்பதால் அப்பொழுது வெளி உலகத்திற்கு சொல்லி விடலாம் என கூறப்படுகிறது.