ஐஸ்வர்யாராயும், நீனும் பேசிக்கவே கூடாது.! ஷூட்டிங் ஸ்பாட்டில் த்ரிஷாவுக்கு கண்டிஷன் போட்ட மணிரத்தினம்.

ponniyin-selvan
ponniyin-selvan

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்  திரிஷா இவர் இதுவரை அஜித், விஜய், விக்ரம், சூர்யா போன்ற டாப் நடிகர்களுடன் நடித்த வெற்றி கண்டுள்ளார் மேலும் சோலோ படங்களிலும் நடித்து நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இதனால் அவரது பயணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்பொழுது கூட நடிகை திரிஷா மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் இவரது மார்க்கெட்டு இன்னும் அதிகரிக்கும். பொன்னின் செல்வன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக படகுழு தொடர்ந்து டீசர், போஸ்டர்,ட்ரைலர் போன்றவற்றை வெளியிட்ட நிலையில் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது அப்பொழுது நடிகர், நடிகைகள் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர் அப்பொழுது நடிகை திரிஷாவும் பேசினார். தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் குறித்தும் அவர் சொல்லி இருந்தார்.

இந்தப் படத்தின் கதையின் படி நானும் ஐஸ்வர்யாவும் எதிரிகள் இருவரும் நேருக்கு நேராக மோதிக் கொள்ளும் காட்சிகள் படத்தில் உள்ளது அப்படி இருந்தாலும் நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம் ஒரு நாள் ஷூட்டிங் இடைவேளியின் பொழுது இருவரும் பேசி சிரித்துக்கொண்டிருந்ததை பார்த்த இயக்குனர் மணிரத்தினம் எங்களிடம் வந்து நீங்கள் பேசிக் கொள்ளக் கூடாது என கூறினார்.

ஏன் இவ்வாறு சொல்கிறார் என்று பார்த்தால் இந்த படத்தில் உங்களுடைய கதாபாத்திரங்கள்  முக்கியமானது நீங்கள் இரண்டு பேருமே படத்தில் எதிரிகள் அப்படி இருக்கையில் இப்பொழுது சகஜமாக பழகினால் உங்கள் கேரக்டர் படத்தில் பாதிக்கும் என கூறியுள்ளார். பிறகு ஐஸ்வர்யாவும் நானும்  பேசிக் கொள்ளவே இல்லை என கூறினார்.