Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய தனி தத்துவமான ஸ்டைல் மற்றும் வசனத்தின் மூலம் கோடான கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். 70 வயதான ரஜினி இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார். கடைசியாக ரஜினி நடித்த ஜெயிலர் அதிரி புதிரி ஹிட் அடித்தது.
அடுத்து தலைவர் 170 171 மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட ரஜினி கேரியரில் மிகவும் மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது படையப்பா தான் காலங்கள் கடந்த பிறகும் இந்த படத்தை பற்றி நாம் பேசி வருகிறோம் இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்க..
இளையராஜா தயாரித்த படத்தில் ரஜினி.. வான்டடாக வந்து மாட்டிய இயக்குனர்.. கடைசியில் என்னாச்சு தெரியுமா.?
ரஜினி, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி, செந்தில், ரமேஷ் கண்ணா, மன்சூர் அலிகான், மணிவண்ணன், அப்பாஸ், லட்சுமி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் அதிக நாட்கள் ஓடிய பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தில் ரஜினிக்கு நிகராக நீலாம்பரி கதாபாத்திரம் பேசப்பட்டது.
இந்த கதாபாத்திரம் யாரை வைத்து எழுதப்பட்டது என்பது குறித்து சமீபத்தில் கே எஸ் ரவிக்குமாரை வெளிப்படையாக கூறினார் அவர் சொன்னது என்னவென்றால்.. படையப்பா படம் ஹிட் அடிக்க முக்கிய காரணம் நீலாம்பரி கதாபாத்திரம் இந்த கதாபாத்திரத்தை முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை மனதில் வைத்து தான் எழுதினேன் என கூறினார்.
இதற்கு அதிமுக தரப்பில் இருந்து பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர் அப்படி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார் இதை அம்மா உயிரோடு இருக்கும்பொழுது சொல்லி இருக்கணும் இப்ப வந்து சொல்வது கோழைத்தனம் அவர் இருக்கும் பொழுது சொல்லி இருந்தால் வெளியே நடமாடி முடியுமா என ஜெயக்குமார் கூறியுள்ளார்.