விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5 சீசன்கள் வெற்றிகரமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள் அதுமட்டுமில்லாமல் ஐந்தாவது சீசனை 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் மூலம் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஆறாவது சீசன் தொடங்க இருப்பதாக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்கள்.
இந்த ஆறாவது சீசனில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது இந்த நிலையில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்பொழுது இணையதளத்தில் கசிந்து வருகிறது. இந்த நாளில் விஜய் தொலைக்காட்சி தங்களுடைய அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்கள் இந்த வீடியோ ரசிகர்களுடைய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன் ஒளிபரப்பப்பட்டு வந்த ஐந்து சீசனங்களில் இல்லாத வகையில் இந்த சீசனில் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரணமானவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வீடியோ தான் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அவர்கள் கூறியுள்ளதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் விஜய் தொலைக்காட்சிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
யார் வேணாலும் விண்ணப்பம் செய்யலாம் தகுதி உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வீடியோவில் நடித்துள்ளவர் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் வெற்றியாளராக ராஜீவ் தான் இந்த வீடியோவில் நடித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு அறிய வாய்ப்பு! 😎
உடனே https://t.co/EebJTRrsGG Login செய்து #BIGGBOSS-இல் கலந்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து Upload செய்யுங்கள்.. 😊 #BiggBossTamil #BBTamilSeason6 #BiggBossTamil6 #பிக்பாஸ் pic.twitter.com/63qFGQqMAq— Vijay Television (@vijaytelevision) August 25, 2022