ஆஹா கல்யாணம் மற்றும் மகாநதி மகா சங்கமம் இன்றைய எபிசோடில் போட்டி நடைபெறுகிறது அந்தப் போட்டியில் மகா அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லி மாமியார் மீது பூ போட்டு கலர் தண்ணி ஊத்தாமல் காப்பாற்று கிறாள். அனைத்து கேள்விக்கும் மகா சரியாக பதில் சொன்னதால் ஐஸ்வர்யாவுக்கும் அவங்க அத்தை சித்ராதேவிக்கும் மகா மீது கடுமையான கோபம் ஏற்பட்டது.
இதனால் கடுப்பான சித்ராதேவி கௌதமிடம் உன் பொண்டாட்டிக்கு என் மேல எந்த பயமும் இல்லை என்ன பத்தி ஒரு கேள்விக்கு கூட அவளுக்கு பதில் தெரியாதா வேணும்னே தான் அவ எல்லாம் செய்றா அவ கூட பொறந்தவ தானே மகா அவ எப்படி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி ராஜலட்சுமி மேல ஒரு சொட்டு கலர் தண்ணி கூட விழாம காப்பாத்தி இருக்கா. இதுக்கு நீதான் ஐஸ்வர்யாவை பழி வாங்கணும் என கௌதமிடம் சொல்கிறாள்.
அதனை தொடர்ந்து அடுத்த சீனில் கௌதமும் ஐஸ்வர்யாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எப்படியாவது இந்த கேமில் ஜெயிச்சு அந்த ஐந்து லட்சம் பணத்தை வாங்கி விட வேண்டும் என பேசிக்கொள்கின்றனர். மேலும் இதனை நேர்மையாக விளையாடினால் ஜெயிக்க முடியாது நாம குறுக்கு வழியில் ஏதாவது பண்ணியாக வேண்டும் என ஐஸ்வர்யா கௌதமிடம் சொல்கிறாள். இந்த போட்டியை நடத்துவது யார் என விசாரித்து அவரிடம் கொஞ்சம் கமிஷன் கொடுத்து நம்ம ஜெயிக்கிறதுக்கான வழியை பாருங்க என ஐஸ்வர்யா கௌதமுக்கு ஐடியா கொடுக்கிறாள்.
அடுத்த சீனில் மகா ஐஸ்வர்யாவிடம் வந்து அக்கா இந்த போட்டியில் நீ ஜெயிச்சா கௌதமிடம் பேசி அந்த அஞ்சு லட்சம் பணத்தை நம்ப வீட்டுக்கடன் அடைப்பதற்கு வாங்கி கொடுக்கிறியா எனக் கேட்கிறாள். அதற்கு ஐஸ்வர்யா கடுப்பாகி மகாவிடம் நான் ஜெயிச்சா என் புருஷன் கௌதமக்கே தரமாட்டேன் உனக்கா தர போறேன் என மஹாவை திட்டுகிறார்.
உடனே மகா இவ கிட்ட கேட்க கூடாதுன்னு நினைச்சோம். ஆனா போய் கேட்டுடோமே என அவளையே அவள் திட்டிக் கொள்கிறாள். இந்த போட்டியில எப்படியாவது நம்ம ஜெயிச்சு அந்த பணத்தை வாங்கி அம்மாவுக்கு கொடுத்தே ஆகணும் என முடிவெடுக்கிறாள்.
இன்னொரு புறம் கங்காவும் குமரனும் இந்த போட்டியில் ஜெயிச்சு அந்த பணத்தை வைத்து கொடைக்கானலில் கங்கா பேரில் ஒரு பெரிய ஜவுளி கடை வைக்க வேண்டும் என முடிவு பண்ணுகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவு அடைகிறது.