அட, நம்ம செல்வராகவனுக்கு இவ்வளவு பெரிய மகளா.? வைரலாகும் குடும்ப புகைப்படம்..

selvaragavan 2

பொதுவாக குழந்தைகள் விரைவில் வளர்ந்து விடுவார்கள் அந்த வகையில் தற்பொழுது செல்வராகவன் தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நிலையில் அதில் அவருடைய மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள் இதனை பார்த்த ரசிகர்கள் செல்வராகவனின் குழந்தைகள் இவ்வளவு வளர்ந்து விட்டார்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தமிழ் திரைவுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் செல்வவராகவன் மிகவும் வித்தியாசமான கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து இயக்கி வருகிறார். மேலும் இவர் படங்களை இயக்குவதை தொடர்ந்து அந்த படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.அந்த வகையில் இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் பகாசூரன் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு கடைசியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியிருந்த சாணி காகிதம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்து அசதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது திரைப்படத்தினை தொடர்ந்து நடிகரும் இவருடைய தம்பியுமான தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

selvaragavan
selvaragavan

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மாதம் படப்பிடிப்பு முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் அவ்வப்போது தன்னுடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் ஆகியவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

selvaragavan 1

இவ்வாறு தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ள நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் இவருடைய மூத்த மகனும், மகளும் நன்றாக வளர்ந்து விட்டார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் செல்வராகவன் மற்றும் அவருடைய மனைவியுடன் வித்யலேகாவும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ஏதோ ஒரு பங்க்ஷனுக்காக அனைவரும் ஒன்று கூடி உள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.