தொகுப்பாளினியாக சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் பல ஆண்டுகாலங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில் அதில் பிசியாக இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் காபி வித் காதல் படத்தின் நிகழ்ச்சி ஒன்றுக்கு வீல் சேரில் வந்த டிடியை பார்த்து ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள்.நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, டிடி, அமிர்தா ஐயர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிகைகளின் கூட்டணியில் காதலும் காமெடியும் கலந்த படமாக உருவாகியுள்ள படம் தான் காபி வித் காதல்.
இந்த படம் வருகின்ற அக்டோபர் ஏழாம் தேதி அன்று வெளியாக இருக்கிறது எனவே சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிவப்பு நிற கவுனில் மிகவும் அழகாக வந்திருந்த தொகுப்பாளினி டிடி அவர் நடக்க முடியாமல் வீல்ச் சரில் வந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
மேலும் அங்கிருந்த புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது டிடிக்கு arthritis பிரச்சனை இருக்கிறதா இதன் காரணத்தினால் தான் நடக்க முடியாமல் வீழ்ச்சாரில் வந்தார் என கூறப்படுகிறது.இவ்வாறு திடீரென டிடியை ரசிகர்கள் வீல்சேரில் பார்த்துள்ள நிலையில் அவருக்கு என்ன ஆனது என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் விரைவில் அவருக்கு குணமாக வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள் காபி வித் காதல் படத்தின் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படம் காமெடி காதல் கலாட்டா என அனைத்தும் கலந்த சுவாரசியமான படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.