சூர்யா படத்தில் நடித்துள்ளாரா “ஏஜென்ட் டினா”.? புகைப்படத்தை பார்த்து குழம்பி போய் இருக்கும் ரசிகர்கள்.!

surya
surya

லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் விக்ரம். கமலஹாசன் சில வருடங்களாக சினிமாவை தவிர்த்து மற்ற பலவற்றிலும் கவனம் செலுத்தி வந்ததால் அவரால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாமல் இருந்தார். அப்படிப்பட்ட நேரத்தில் இயக்குனர் லோகேஷ் கமலிடம் ஒரு சூப்பரான ஆக்ஷன் கதையை கூற அந்த கதை விக்ரம் திரைப்படமாக உருவாக்கியது.

இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் தனக்கே உரிய பாணியில் எடுத்திருந்தார். கமலும் விரும்பி இந்த படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல் நடித்ததோடு மட்டுமல்லாமல் விக்ரம் திரைப்படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது.

படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று எதிர்பாராத வசுலை அள்ளியதால் கமலஹாசன் மற்றும் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தது. மேலும் இந்த படம் வெற்றி அடைய முக்கிய காரணம் படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, நரேன், பகத் பாசில் போன்ற பலரும் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக நடிகர் சூர்யா கடைசி சில நிமிடங்கள் மட்டும் விக்ரம் திரைப்படத்தில் வந்து போவார். அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. சூர்யாவை தொடர்ந்து இந்த படத்தில் நடன கலைஞர் வசந்தி ஏஜென்ட் டினா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசதி இருந்தார். இவர் இதற்கு முன் பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடனம் ஆடி உள்ளவர்.

இந்த நிலையில் சூர்யா மற்றும் விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தில் இருவருடன் இணைந்து ஏஜென்ட் டினா நடனம் ஆடுவது போல இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது ஆனால் உண்மையில் இந்த படத்தில் ஏஜெண்ட் டினா நடிக்கவில்லை.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் அதைத் தான் சொல்லி வருகின்றனர் இந்த படத்தில் ஏஜெண்ட் டினா நடிக்கவில்லை என்று… இருப்பினும் இந்த புகைப்படம்  வைரல்லாகி வருகிறது.

agent tina
agent tina