ஏஜென்ட் கண்ணாயிரம் படம் சந்தானம் படமே கிடையாது.? திடீரென குண்டை தூக்கி போட்ட இயக்குனர்..!

santhanam
santhanam

சினிமா உலகில் இயக்குனர் காமெடியன் இசையமைப்பாளர் என பலரும் அண்மைக்காலமாக ஹீரோவாக நடித்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் காமெடி நடிகர் சந்தானம் அண்மைக்காலமாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் இவரது படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன.

இருப்பினும் இவரது திரைப்படங்கள் பெரிதும் காமெடி கலந்த திரைப்படங்களாக இருப்பதால் ஒரு முழு ஹீரோவாக அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் அதை உடைத்து எரிக்கும் வகையில் சந்தானம் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் வஞ்சகர் உலகம் என்ற படத்தை இயக்கி வெற்றி கண்ட மனோஜ் பீதா ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க சந்தானம் ஒரு ஏஜெண்டாக நடித்துள்ளார் இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து ரியாஸ், சுருதி, ஹரிஹரன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உட்பட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் முதன்முதலாக சந்தானம்..

இப்படி வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா கூறியது.. இது தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என்றாலும் பல மாற்றங்களை செய்திருக்கிறேன் அவரது பஞ்ச் டயலாக் டைமிங் டயலாக் இருக்காது கதாநாயகி இருந்தாலும் காதலோ ரொமான்ஸ் இருக்காது சந்தானத்தை இதுவரை பார்க்காத கோணத்தில் காட்ட முயற்சித்து இருக்கிறோம்..

இந்த படத்தில் அவர் ஏஜென்ட் கண்ணாயிரம் ஆகத்தான் தெரிவாரே தவிர சந்தனமாக தெரிய மாட்டார் இது மத ரீதியான ஒரு பிரச்சனையைப் பற்றி துப்பறியும் கதை ஆனால் எந்த மதத்தையும் குறிப்பிட்டு படத்தை எடுக்கவில்லை.. இது ஒரு தாய்க்கும் மகனுக்குமான பிணைப்பையும் படம் சொல்லும் காமெடி ஆக்சன் போன்றவை கதைக்கு ஏற்றபடி ஆங்காங்கே இருக்கும் இந்த படம் சந்தானம் கேரியரில் மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.