தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவருடைய நடிப்பில் உருவாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து இயக்குனர்கள் விஜய் வைத்து படம் இயக்க ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தில் கேங்டர் கதையில் நடிக்க இருக்கிறார் விஜய்.
கேங்ஸ்டர் படமான இந்த படத்தில் வில்லன்களாக அர்ஜூன், சஞ்சய், பிருத்துவி ராஜ், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது மேலும் இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவும் இந்த படத்தில் அதே ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முக்கிய சிறப்பு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விக்ரம் படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் விஜய்யின் படத்தில் நீண்ட நேரம் இவருடைய காட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இவர்களுடைய கூட்டணி முதன்முறையாக நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் அமைந்திருந்த நிலையில் இதனை தொடர்ந்து பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
தற்பொழுது சில ஆண்டுகள் கழித்து மூன்றாவது முறையாக விஜயின் 67-வது படத்தில் இணைய போகிறார்கள். இது சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள் ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.