சினிமா உலகைப் பொறுத்தவரை அருமையான பிரபலங்கள் பலர் இருந்தாலும் தொடர்ந்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் ஒரு நபராக இருந்தால் மட்டுமே சினிமா உலகில் உச்சத்தை அடைய முடியும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி மேல் வெற்றி கண்டு மக்கள் மற்றும் ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக தற்போது பார்க்கப்படுபவர் ஏ ஆர் முருகதாஸ்.
முதலில் அஜித்தை வைத்து தீனா என்னும் ஒரு மாபெரும் ஆக்ஷன் படத்தைக் கொடுத்து இருந்தார் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கவே அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் சினிமாவுலகில் படங்களை இயக்குவதை தயாரிப்பதுமாக இருந்து வருகிறார் அதிலும் குறிப்பாக இவர் இதுவரை பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார்.
மேலும் தோல்வியை சந்திக்காத இயக்குனர்களில் ஒருவராக இவர் இன்று வரை இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தீனா திரைப்படத்தை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் விஜய் உடன் கை கோர்த்தது சர்க்கார், துப்பாக்கி, ஏழாம் அறிவு, கஜினி, கத்தி போன்ற பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.
கடைசியாக ரஜினியுடன் இணைந்து தர்பார் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் அந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படம் வெளிவந்து சுமாரான வெற்றியை ருசித்தது அதன்பின் படங்களை இயக்காமல் இருந்து வந்தார்.
இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் ஒன்று உலா வருகிறது அதாவது ஏ ஆர் முருகதாஸ் படங்களையும் தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளார் இவருடன் பணியாற்றிய உதவி இயக்குனராக பொன்குமார் புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது அதில் ஹீரோவாக கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஏ. ஆர். முருகதாஸ் தயாரிக்க உள்ளாராம்.