சிறந்த இயக்குனர் என பெயர் எடுத்து உள்ள மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து எடுத்து உள்ள திரைப்படம் தான் மாமன்னன் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் கைகோர்த்து வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவீனா ரவி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கியது மேலும் ரசிக்கும் படியும் சிந்திக்கும்படியும் கதை இருந்ததால் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனால் படத்தை பார்க்க அடுத்தடுத்து மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களைப் போல சினிமா பிரபலங்களும் பலரும் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர் படத்தைப் பார்த்த ஒரு சிலர் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அந்த வகையில் கமலஹாசன் மாமன்னன் படம் சூப்பராக இருக்கிறது என கூறி மாரி செல்வராஜை வாழ்த்தியதை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறனும் மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. மாமன்னன் திரைப்படம் மிக அருமையாக இருக்கிறது என கூறினார் மேலும் பேசிய வெற்றிமாறன் இப்பொழுது இந்திய அரசியலின் உண்மை நிலையை ஜாதி இயக்கவியல் உடன் மிக நுணுக்கமாக கையாண்டு இருக்கிறார் மாரி செல்வராஜ் எனக் கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மாமன்னன் நல்ல விமர்சனங்களும், வசூலும் அள்ளி வருவதால் மாரி செல்வராஜ் மற்றும் மாமன்னன் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது அண்மையில் கூட இந்த படத்தின் வெற்றியை முன்னிட்டு மாரி செல்வராஜுக்கு உதயநிதி கார் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.