2022 வது ஆண்டு பல நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக இருந்திருக்கிறது குறிப்பாக தளபதி விஜய், அஜித், கமல் போன்ற நடிகர்களின் படங்கள் வெளிவந்து 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது. ஆனால் இந்த படங்கள் அனைத்துமே பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் ஆனால் ஒரு சில திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளி உள்ளது.
அந்த வகையில் 2022-ல் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை அள்ளி அசத்திய திரைப்படம் என்றால் அது லவ் டுடே திரைப்படம் தான்.. இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்தது. அதுவும் இந்த காலகட்டத்திற்கு தேவையான படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்திய ராஜ், ரவீனா ரவி, யோகி பாபு மற்றும் இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை 70 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தி உள்ளது. இன்னமும் இந்த திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் வெற்றி நடை கொண்டு வருகிறது இந்த படத்தை பார்த்த பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் அவரை அழைத்து பேசி பேசினார் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பார்க்கப்படும் அட்லீ லவ் டுடே திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை போட்டுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
சிறப்பான காமெடி.. பிரதீப் சிறப்பான கதை களத்தில் கலக்கி உள்ளதாக பாராட்டி உள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், சத்தியராஜ், இவானா போன்றவர்களை மீண்டும் ஒரு முறை பாராட்டி உள்ளார் இதற்கு பதில் அளித்த இவானா நீங்கள் பாராட்டியதன் மூலம் இந்த நாள் எனக்கு நல்ல நாளாக அமைந்துள்ளது என கூறியுள்ளார்.