தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன அதில் அனைத்து படங்களும் வெற்றி ருசிக்கிறதா என்றால் இல்லை ஒரு சில படங்கள் மட்டுமே மக்களை கவர்ந்திழுக்கும் இந்த படங்கள் மட்டுமே வெற்றி பெறும். அந்த வகையில் இப்போ மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார்.
முதல் பாகம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் உருவானதால் இந்த படம் எடுக்கும் போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது தற்போது படம் ரிலீஸ் ஆகி உள்ளதால் படத்தை பலரும் போட்டி போட்டுக் கொண்டு பார்த்து வருகின்றனர்.
மணிரத்தினம் படத்தை சூப்பராக எடுத்துள்ளதால் நல்ல விமர்சனமே இதுவரை வந்துள்ளன அதனால் வசூல் வேட்டையும் சூப்பராக நடத்தி வருகிறது. ஒரு நாள் முடிவில் உலக அளவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 75 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே முதல் நாளில் 27 கோடி வசூல் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
வருகின்ற நாட்கள் சனி ஞாயிறு என்பதால் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் எப்படி பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் அதேபோல திரை பிரபலங்களும் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க தவிக்கிறார்கள்.
ஒரு சிலர் டிக்கெட் இல்லாமல் இன்னும் படத்தை பார்க்காமல் இருந்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டு உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. காவியம் உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள்.
காவியம்… உழைத்த ஒவ்வொருவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪 pic.twitter.com/xKFO7te6iV
— P.samuthirakani (@thondankani) October 1, 2022