பெண்களுக்கு சினிமாவை தாண்டி அனைத்து துறைகளிலும் தொல்லை இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சினிமாவில் உள்ள நடிகைகள் வெளிப்படையாக பேசி விடுகிறார்கள் ஆனால் மற்ற துறையில் உள்ள பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இப்படி பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசாமிகளை பற்றி வெளியே சொன்னால்தான் அவர்கள் கொஞ்சமாவது அடங்குவார்கள் என பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
அப்படித்தான் ஒரு சீரியல் நடிகைக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது சின்னத்திரையில் பல சீரியல்களில் வெள்ளியாக நடித்த பிரபலம் அடைந்தவர் தான் ஜெயலட்சுமி இவர் வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் மற்ற துறையில் இருப்பவர்களை போல சினிமாவில் பெண்களுக்கு பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது ஒரு பிரச்சினை நடக்கும் பொழுது அமைதியாக இருந்து விட்டு அதன் பிறகு இயக்குனர், நடிகர் என குறை சொல்வது சரியாக இருக்காது.
உங்களிடம் யாராவது தவறாக நடந்து கொள்கிறார் என்றால் உடனே அதனை தட்டி கேளுங்கள் அது தவறான விஷயம் என்று சொல்லுங்கள் அப்பொழுதுதான் அடுத்தவரிடம் அதை செய்ய மாட்டார்கள் ஒரு முறை நான் பார்த்து சென்ற பொழுது ஒருவர் என்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டான். நான் அவனை துரத்தி துரத்தி செருப்பால் அடித்தேன்.
சமுதாயத்தில் நடிகைகள் மீது ஒரு தவறான எண்ணம் இருக்கிறது. முதலில் அந்த எண்ணத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் எனக்கு வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம் என்ற ஒரு மெசேஜ் வந்தது அதை தொடர்பு கொண்டால் அதில் நடிகைகளின் புகைப்படங்களை வைத்து பேரம் பேசினார்கள் எனக்கு ரெண்டு லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசினார்கள். எனக்கே தெரியாமல் பேசி இருக்கிறார்கள் என்று ஜெயலக்ஷ்மி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.