துணிவு படம் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இயக்குனர் ஹெச் வினோத் சபரிமலை யாத்திரை.! வைரல் வீடியோ..

H.vinoth
H.vinoth

சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ஹெச் வினோத். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அஜித்தை வைத்து மூன்று படங்களும் தொடர்ச்சியாக இயக்கி வந்தார்.

அந்த வகையில் இயக்குனர் ஹெச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் முதன் முதலில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. முதல் படமே தோல்வி என்ற விரக்தியில் இருந்த ஹெச் வினோத்தை அழைத்து இரண்டாவது படத்தையும் கொடுத்துள்ளார் நடிகர் அஜித்.

இதனை தொடர்ந்து அஜித் மற்றும் எச் வினோத் கூட்டணியில் இரண்டாவதாக உருவான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் வேறொரு நடிகர் காக எழுதப்பட்ட துணிவு படத்தின் கதையைப் பார்த்த அஜித் இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று வாண்டடாக வந்து கேட்டதால் அஜித்திற்காக சில காட்சிகளை மாற்றி துணிவு படத்தை உருவாக்கியுள்ளார் ஹெச் வினோத்.

ஆனால் துணிவு திரைப்படம் அஜித் அவருக்காக உருவாக்கப்பட்டது கிடையாது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் ஹெச் வினோத் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஹெச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூலில் பட்டைய கிளப்பி வெற்றி கண்டு வரும் துணிவு திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் ஹெச் வினோத் அவர்கள் சமீபத்தில் கரும்பு சாப்பிடும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. வெற்றியை கண்ட உடனே இயக்குனர் ஹெச் வினோத் சபரிமலைக்கு யாத்திரை செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.