தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுக்கும் ரஜினியின் படங்களுக்கு இணையாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதோடு வசூலிலும் அவருக்கு ஈடு இணையாக வலம் வருபவர் தளபதி விஜய்.
சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினிக்கு பிறகு விஜய்க்கு செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் விஜயுடன் இணைந்து நடிக்க பல்வேறு இளம் நடிகர், நடிகைகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அவரால் எல்லாரும் வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்றாலும் ஒரு சில பிரபலங்களுக்கு கொடுத்து அவரது சினிமா கேரியரை தூக்கி விட்டுள்ளார் அந்த வகையில் தமிழ் சினிமாவில் பகவதி என்ற திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து பின் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த தற்போது கவனிக்கபட கூடிய நடிகராக உருமாறி உள்ளவர்தான் நடிகர் ஜெய்.
இதுவரை சுப்ரமணியபுரம், அர்ஜுனன் காதலி, சரோஜா, அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, சென்னை 600028 போன்ற பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும் சமீபகாலமாக இவரது திரைப்படங்கள் தோல்வியை தழுவி உள்ளதால் அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள தற்போது பல்வேறு சூப்பரான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவருக்கு பிரேக்கிங் நியூஸ், எண்ணி துணிக. குற்றமே குற்றம். சிவா சிவா சுந்தர் சியுடன் ஒரு படத்தில் கைகோர்த்து நடித்து வருகிறார் இப்படி பல்வேறு திரைப்படங்களில் இவரது கையில் தன்வசப்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜெய்யை பார்த்து உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த ஜெய் நடிகர் சிம்பு கல்யாணம் செய்த பிறகுதான் எனக்கு கல்யாணம் என்று பதிலளித்தார்.
மேலும் அவருடன் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்று விஜய் மீண்டும் படம் எப்போது பண்ணுவீர்கள் என கேட்டதற்கு 150 இருக்கும் மேல் அவருடன் நடிக்க நான் வாய்ப்பு கேட்டு விட்டேன்.
அவரோ நீங்கள் ஒரு முன்னணி ஹீரோவாக நடித்து வருகிறீர்கள் எப்படி முடியும் என கேட்டு விடுகிறார் அதனால் அவருடன் சேர்ந்து நடிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.